பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளத்தால் பொதுமக்கள் அவதி


பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளத்தால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 3 Nov 2017 6:30 AM IST (Updated: 3 Nov 2017 6:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த மாதவரம் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 32-வது வார்டு கடப்பா சாலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பாக பாதாள சாக்கடை திட்ட பணிக்காக சாலையின் நடுவே ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டன.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 32-வது வார்டு கடப்பா சாலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பாக பாதாள சாக்கடை திட்ட பணிக்காக சாலையின் நடுவே ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டன. பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பிறகும் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை.

இந்தநிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டைபோல் நிற்கிறது. மேலும் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் உள்ள சேற்றில் சிக்கி விழுந்து எழுந்து செல்கின்றனர். எனவே சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றிவிட்டு, உடனடியாக அந்த பள்ளங்களை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story