நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 58 வீடுகள் இடித்து அகற்றம்
அந்தியூர் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 58 வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள அத்தாணி ஓடை மேட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 80 வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாகவும், எனவே அந்த வீடுகளை நவம்பர் மாதம் 2-ந் தேதிக்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நோட்டீசு அனுப்பப்பட்டது.
அதுமட்டுமின்றி அந்த பகுதியில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளிக்கூடம், 215 ஆண்டுகள் பழமைவாய்ந்த அனந்தவள்ளி உடனமர் சந்திரசேகர சாமி கோவில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் பொது கழிப்பிடம் ஆகியவற்றையும் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டிருந்தது.
முற்றுகை
இந்த நிலையில் பவானி உள்கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கங்காதரன், அந்தியூர் தாசில்தார் செல்லையா மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அத்தாணி ஓடை மேடு பகுதிக்கு 4 பொக்லைன் எந்திரங்களுடன் நேற்று காலை 10 மணி அளவில் வந்தனர். இதையொட்டி அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் அந்தியூர், ஆப்பக்கூடல் போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்கள், ‘நாங்கள் இந்த பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எனவே நாங்கள் குடியிருந்து வரும் வீட்டை இடித்தால், நாங்கள் எங்கு போவோம்?’ என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி இங்குள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட உள்ளன. எனவே இதில் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் உங்கள் கோரிக்கையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து மாற்று இடம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.
பெண்கள் கதறி அழுதனர்
இதையடுத்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகள் இடித்து அகற்றும் பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்த உடைமைகளை அப்புறப்படுத்த தொடங்கினர். தங்களுடைய கண் எதிரிலேயே தாங்கள் மிகவும் சிரமப்பட்டு கட்டிய வீடுகள் இடிக்கப்படுவதை கண்டதும், பல பெண்கள் கதறி அழுதனர்.
மொத்தம் 80 வீடுகளில் 22 வீட்டை சேர்ந்தவர்கள் தங்களுடைய வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு நீதிமன்றம் 14 நாட்கள் அவகாசம் வழங்கி உள்ளது என்ற உத்தரவை காண்பித்தனர். இதனால் குறிப்பிட்ட 22 வீடுகள் மட்டும் இடித்து அகற்றப்படவில்லை. மற்ற 58 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.
வாக்குவாதம்
இதைத்தொடர்ந்து அங்கிருந்த அரசு பள்ளிக்கூடம், கோவில், மேல்நிலை குடிநீர் தொட்டி, பொதுக்கழிப்பிடம் ஆகியவற்றை இடித்து அகற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொதுமக்கள் மீண்டும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் அத்தாணி ஓடை மேடு, தென்றல் நகர், கருப்பக்கவுண்டன்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது 35 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
எனவே இந்த பள்ளிக்கூடத்தை இடித்தால் இங்குள்ள மாணவ-மாணவிகள் எங்கு சென்று படிப்பார்கள். நாங்கள் மிகவும் ஏழைகள். எங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டும் என்றால் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அத்தாணிக்கு தான் வரவேண்டும். அதுவும் 2 பஸ்கள் ஏறி இறங்கி செல்ல வேண்டும்.
காத்திருப்பு போராட்டம்
இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் 10 வயதுக்கு உள்பட்டவர்கள்தான். இவர்களை நாங்கள் எப்படி 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியும். இது சாத்தியமில்லை. எங்கள் குழந்தைகள் படிக்க இங்கேயே மாற்று பள்ளிக்கூடம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இங்குள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டியை இடித்தால் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். பழமை வாய்ந்த கோவில் மற்றும் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடம் ஆகியவற்றையும் இடித்து அகற்ற விட மாட்டோம்,’ என்றனர். அதுமட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகளுடன், அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிக்கூடம், கோவில், பொது கழிப்பிடம், குடிநீர் மேல்நிலை தொட்டி ஆகியவை உள்ள பகுதிகளுக்கு 2 சர்வே எண்கள் உள்ளன. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை மாலை 4 மணி அளவில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story