ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2017 3:45 AM IST (Updated: 4 Nov 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஈரோடு காந்திஜி ரோடு ஜவான்பவன் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஈரோடு காந்திஜி ரோடு ஜவான்பவன் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பா.பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட நெறியாளர் சிவ.செல்லபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் உள்பட பல்வேறு கட்சியினர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், பா.ஜனதா கட்சியினரின் நடவடிக்கைகளை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்ட நிர்வாகிகள் அம்ஜத்கான், பைஜில் அகமது, நிசார், ஜாபர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story