தண்டவாளம் இல்லாமல் ஓடும் ரெயில்
தண்டவாளமே இல்லாமல் ஓடும் உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் தண்டவாளம் இல்லாமல் ஓடும் ரெயில் சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் போன்ற எவ் விதப் பிடிமானமும் இல்லாமல், தண்டவாளம் கூட இல்லாமல் இயங்கும் இந்த ரெயில், ஹுனான் ஜுஜூ பகுதியில் முதல்கட்டமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரெயில் உற்பத்தி நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி. கார்ப்பரேஷன் லிமிடெட், இப்புதுமையான ஸ்மார்ட் ரெயிலை தயாரித்திருக்கிறது.
ரெயில் செல்லவேண்டிய வழித்தடம் சாலையில் வெண்ணிற கோடுகளாகக் காணப்படுகிறது. சாலையில் இந்த வெள்ளைக் கோடுகள் 3.75 மீட்டர் அகலத்தில் சீரான இடைவெளியில் உள்ளன.
சென்சார் மூலம் தானாகவே இயங்கக்கூடிய இந்த ஸ்மார்ட் ரெயில், சாலையில் உள்ள வெள்ளைக் கோடுகள் வழியாகச் செல்கிறது.
இதில் ஒரே நேரத்தில் 300 பேர் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 70 கி.மீ. வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட் ரெயில், 32 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிறவகை ரெயில்கள், சுரங்கப்பாதை மற்றும் தண்டவாளம் அமைக்கும் செலவை விட இந்த ரெயிலுக்கு மிகக்குறைவான செலவே ஏற்படுவதாகக் கூறப்படு கிறது.
சீனாவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரெயில், இவ்வகையில் உலகிலேயே முதல்முறையானது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story