உணவை ‘அச்சிடும்’ 3டி எந்திரம்!
சமீப ஆண்டுகளில் அறிமுகமான முப்பரிமாண அச்சு எந்திரங்கள் (3டி பிரிண்டர்கள்) புதிய பரபரப்பை ஏற்படுத்தின.
பல பொருட்களை முப்பரிமாண அச்சு எந்திரங்கள் மூலம் உருவாக்கிவிட முடியும் என்பது இதன் ஆச்சரியம்.
இந்த முப்பரிமாண அச்சு எந்திரங்கள் இன்னும் முழுமையாக பொதுப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே இதில் அடுத்தகட்டமாக ஒரு புதிய தொழில்நுட்பம் வெள்ளோட்ட முறையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது, உணவுகளையும் ‘அச்சிட்டு’ அளிக்கும் நுட்பம்தான் அது. முப்பரிமாண உணவு அச்சீட்டு எந்திரமாக அறிமுகமாகியிருக்கும் இந்த எந்திரம், உணவுகளைத் தயாரிப்பதற்கு உதவும்.
பிரபல ஆலிவுட் திரைப்படங்கள் சிலவற்றில் காட்டப்பட்ட, எதிர்கால உணவு தயாரிப்பு முறைகளுக்கு ஒரு முதல் படி எந்திரமாக இது உருவாகியிருக்கிறது.
இப்போதைக்கு சாதாரண உணவுகள் அனைத்தையும் இதில் தயாரிக்க முடியாவிட்டாலும், சில வகைப் பழங்களின் சுவையை உடைய உணவுகளை இந்த எந்திரத்தின் மூலம் அச்சிடலாம்.
அதாவது, சாக்லேட், வெனிலா, புதினா போன்ற சுவைகளை உடைய பதார்த்தங்களை இது அச்சிடக்கூடியது.
இதன் தயாரிப்பாளர்கள், எதிர்காலத்தில் இவ்வகை எந்திரங்களால் ஒரு ‘ஹம்பர்கரை’ கூட உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
‘புடினி’ என்று அழைக்கப்படும் இந்த எந்திரம், உணவு தயாரிப்புத் தொழில்நுட்பத்தில் ஒரு புதுமைதான்!
Related Tags :
Next Story