தூத்துக்குடியில் இருந்து கேரளா சென்ற பஸ் மோதி வாலிபர் பரிதாப சாவு 11 பேர் படுகாயம்


தூத்துக்குடியில் இருந்து கேரளா சென்ற பஸ் மோதி வாலிபர் பரிதாப சாவு 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Nov 2017 2:45 AM IST (Updated: 4 Nov 2017 7:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து கேரளா சென்ற பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி,

தூத்துக்குடியில் இருந்து கேரளா சென்ற பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–

அரசு பஸ்

தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலம் சங்கனாச்சேரிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ், நெல்லை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் தென்மலையில் சென்று கொண்டிருந்தது.

தென்மலை அணை அருகில் உள்ள ஒரு பாலம் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று மோதியது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கிருந்த ஒரு கடைக்குள் புகுந்தது.

வாலிபர் பலி

பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த கேரள மாநிலம் புத்தூரைச் சேர்ந்த சுந்தரேசன் மகன் அகில் (வயது 23) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பஸ்சில் இருந்த 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 2 பேர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், 9 பேர் புனலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயம் அடைந்த 11 பேரும் நெல்லை, சங்கரன்கோவில் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறினர். பஸ் கடைக்குள் புகுந்ததால், கடையில் இருந்த யாருக்கும் காயம் இல்லை. கடை மட்டும் சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக தென்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story