பெருவளை வாய்க்கால் தண்ணீர் வயல்களில் புகுந்ததில் 500 ஏக்கர் நெல், வாழை நாசம் விவசாயிகள் வேதனை
மண்ணச்சநல்லூர் அருகே பெருவளை வாய்க்கால் தண்ணீர் வயல்களில் புகுந்ததில் 500 ஏக்கர் நெல், வாழை நாசமாயின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சமயபுரம்,
முக்கொம்பு வாத்தலையில் இருந்து கடந்த மாதம் புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்காக 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து மண்ணச்சநல்லூர் பகுதியில் புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால், பங்குனி வாய்க்கால் ஆகிய மூன்று வாய்க்கால்களிலும் தண்ணீர் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு ஓடுகிறது. வாய்க் கால்களின் கரைகள் பலவீனமாக உள்ளதாலும், திறந்து விடப்பட்ட தண்ணீரோடு பெய்து வரும் மழைத் தண்ணீரும் சேர்ந்து வருவதாலும் பல ஆண்டுகளாக இவ்வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் புதர்கள் அகற்றப் படாததாலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோபுரப்பட்டியில் பெருவளை வாய்க்காலில் வரும் தண்ணீர் வயல்களில் புகுந்ததால் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
இது குறித்து அழிஞ்சிக்கரையை சேர்ந்த விவசாயி காத்தான் கூறியதாவது;-
என்னை போன்ற விவசாயிகள் நெல் மற்றும் வாழை விவசாயம் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம். பெருவளை வாய்க்காலில் வரும் தண்ணீர் நாங்கள் நெல் மற்றும் வாழை நடவு செய்திருந்த வயல்களில் அதிகளவு புகுந்ததால் முற்றிலும் அழுகி நாசமாகி உள்ளது. கடன் வாங்கி நடவு செய்திருந்த எங்களுக்கு நஷ்டம் தான் மிச்சம். வாங்கியக்கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.
தண்ணீர் திறப்பதற்கு முன்பே வாய்க்கால்களின் கரைகள் பலமாக இருக்கிறதா என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். விவசாயம் செய்வதற்கு நீர் ஆதாரம் முக்கியம் என்றாலும் மழை பெய்து வரும் காலங்களில் நீர் திறப்பின் அளவை குறைத்து கொண்டாலே வயல்களில் தண்ணீர்புகும் நிலையை தவிர்க்க முடியும்.
மேலும் கோபுரப்பட்டி அழிஞ்சிக்கரையில் கடந்த 15 நாட்களுக்குள் பெருவளை வாய்க்காலின் வடக்கு கரையில் 3 முறை உடைப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், தற்காலிமாக மணல் மூட்டைகளை அடுக்கி விட்டு சென்று விட்டார்கள்.
சரியான, முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் எங்களை போன்ற விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தவிர்த்திருக்க முடியும். அதிகாரிகளின் மெத்தன போக்கால் கோபுரப்பட்டி, கோவத்தக்குடி, கடுக்காத்துறை, பாச்சூர், வீராந்தநல்லூர், உளுந்தங்குடி போன்ற கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் மற்றும் வாழைகள் நாசமாகி இருக்கிறது. இதனால் சுமார் ரூ.50 லட்சம் வரை விவசாயிகளுக்கு நஷ்டமாகி உள்ளது. இதற்கு அரசு தான் உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருவளை வாய்க்காலை ஒட்டி அழிஞ்சிக்கரையில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மேற்றலீஸ்வரர் கோவில் என்ற பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் மழைக்காலங்களில் மழைநீர் கோவில் வளாகத்திற்குள் தேங்கி நிற்காமல் செல்லக்கூடிய வகையில் கோவில் பிரகாரத்தில் இருந்து பெருவளை வாய்க்காலில் விழும் வகையில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. தற்போது வயல்களில் புகுந்துள்ள பெருவளை வாய்க்காலின் தண்ணீர் கோவிலுக்குள் புகும் நிலையில் உள்ளதால் அங்கு வரும் பக்தர்கள் மிகவும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

Related Tags :
Next Story