தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவை தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும்
புகளூர் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.ம.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புகளூர் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும். நடப்பாண்டில் கரும்பு அரவை பருவத்திற்கு முன்பு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில்...
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பண மதிப்பிழப்பு செய்து மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய மத்திய அரசை கண்டித்து வருகிற 8-ந் தேதி தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அவை தலைவர் நல்லசாமி, பொருளாளர் தங்கவேல், மண்டல இளைஞர் அணி உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story