கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்


கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்
x
தினத்தந்தி 5 Nov 2017 4:00 AM IST (Updated: 5 Nov 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி கணக்க விநாயகருக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து பிரகதீஸ் வரர் சமேத பெரிய நாயகி அம்பாளுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர் கள் குருக்கள் தெரு, கணக்கவிநாயகர் வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கிரிவலம் வந்தனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திர சோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டி குளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலை மீது அமைந்துள்ளது. இந்த மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கிரிவலத்தை முன்னிட்டு மலைமீதுள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், களபம், விபூதி, பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், மலை அடிவாரத்தில் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், மலையை சுற்றி அரோகரா... அரோகரா... என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கிரிவலத்தில் செட்டிகுளம், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், இரூர், பாடாலூர், நாரணமங்கலம், மருதடி, குரூர், புதுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை, நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்தனர். 

Next Story