ஆசை குறைகிறது.. ஆனந்தம் மறைகிறது..
தம்பதியர்களில் பெரும்பாலானவர்கள் பகல் வாழ்க்கையிலே சோர்ந்து போகிறார்கள். அதனால் இரவு வாழ்க்கையில் அவர்களுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை.
தம்பதியர்களில் பெரும்பாலானவர்கள் பகல் வாழ்க்கையிலே சோர்ந்து போகிறார்கள். அதனால் இரவு வாழ்க்கையில் அவர்களுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. இரவு என்றால் சாப்பிட வேண்டும்- தூங்கவேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்கிறது. தாம்பத்ய தொடர்பில் ஈடுபடுவதை தள்ளிவைத்துவிடுகிறார்கள். மாதத்திற்கு ஒரு தடவைகூட பல தம்பதிகள் இணைவதில்லை. அவர்களுக்கு தாம்பத்யம் கசந்து போக என்ன காரணம் என்பதை அலசுவோம்.
பெண்களுக்கு விருப்பம் குறைவதற்கு பொதுவாக சொல்லப்படும் காரணங்கள் பல இருக்கின்றன.
கணவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்? அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறார்? என்ற இரண்டு விஷயங்களுக்கும்தான் பெரும்பாலான பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமண பேச்சுவார்த்தை நடக்கும்போது ஆணின் சம்பளம் உயர்த்தி சொல்லப்பட்டிருக்கலாம். அவர் அலுவலகத்தில் உயர்ந்த பதவி வகிப்பதாகவும் கூறப்பட்டிருக்கலாம். திருமணத்திற்கு பிறகு அவை எல்லாம் ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் என்ற உண்மையை மனைவி உணர்ந்தால், கணவரை பழிக்குப்பழி வாங்க நினைக்கிறார்கள். இரவு நேரங்களில் அவருக்கு இணங்காமல் தேவையற்ற காரணங்களைக்கூறி, தவிர்த்து, ஒருகட்டத்தில் அவருக்கு செக்ஸ் ஆசையே இல்லாதஅளவுக்கு செய்துவிடு கிறார்கள். சில பெண்கள், ‘இந்த பொய்யரை நம்பி என்னை அவரிடம் ஒப்படைக்கமுடியாது’ என்று நினைத்து, கணவரை ஏங்கவைத்துவிடுகிறார்கள்.
கணவர் மீது ஏதாவது ஒரு வகையில் தற்காலிக கோபம் இருக்கும். செக்ஸ்க்கு இணங்காமல் தவிர்த்து, அந்த கோபத்தை கணவரே புரிந்துகொள்ளட்டும் என்று நினைக்கிறார்கள். ‘என்ன பிரச்சினை உனக்கு? ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?’ என்று கணவர் பக்கத்தில் இருந்து சமாதானக் கொடி பறக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்.
இப்படிப்பட்ட பெண்களில் சிலர் இரவில், அழகுக் குறிப்பை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். ‘உங்களுக்காகத்தான் என்னை அழகுப்படுத்திக்கொள்கிறேன்’ என்று கூறிக்கொண்டு, கணவர் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் மனநிலையில் இருக்கும்போது, தன் முகத்திற்கு ‘பேஸ் பேக்’ போட்டுக்கொள்வார்கள். ‘இதோ காய்ந்துவிடும்.. கொஞ்ச நேரம் பொறுத்திருங் கள்.. கழுவிவிடுகிறேன்’ என்று கூறிவிட்டு, கணவர் தூங்கிய பின்பே முகத்தை சுத்தம் செய்வார்கள்.
காதலிக்கும் காலத்திலோ, திருமணமான புதிதிலோ ‘உங்களை மாதிரியான அழகான, அம்சமான ஆணை நான் பார்த்ததே இல்லை’ என்று பெண்கள் சொல்வதுண்டு. அத்தகைய பேச்சு அவரது செக்ஸ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பேச்சாகும். அவரது செக்ஸ் ஆர்வத்தை குறைக்க விரும்பும்போது அதே மனைவி, ‘என்ன இது டிரஸ்.. ஏன் இப்படி ஹேர் ஸ்டைல் பண்ணியிருக்கீங்க.. உங்க உடல் எடை ஏன் கண்டபடி ஏறுகிறது.. அழகாக தோன்றவேண்டும் என்ற அக்கறையே உங்களிடம் இல்லை’ என்று கூறி, அவரது ஆசைக்கு அப்போதே குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்.
கணவர் தற்போது உறவுக்கு தயார் இல்லை என்பதை புரிந்துகொண்டு, தான் ஆசையாக இருப்பது போல் சில பெண்கள் காட்டிக்கொள்வார்கள். கணவர் அப்போது அவளை கண்டுகொள்ளாமல் போய்விடுவார். அதையே காரணம் காட்டி, ‘நீங்க அன்றைக்கு என்னை கண்டுகொள்ளவே இல்லை. நீங்கள் விரும்பும்போது மட்டும் நான் உடன்படவேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பி, வாரக்கணக்கில் கணவரை பட்டினிப் போட்டுவிடுவார்கள்.
எல்லா பெண்களும் தங்கள் கணவர் வெளியே செல்லும் போது அழகாக தோன்ற வேண்டும் என்று விரும்புவார்கள். வீட்டில் கணவர் தன்னோடு இருக்கும்போதும் அதுபோன்று அழகுடன் கவர்ச்சியாக தோன்றவேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு உண்டு. அதை 99 சதவீத கணவர்கள் புரிந்து கொள்வதில்லை. அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் சரியாக உடலை கழுவாமல், மேல் சட்டை இல்லாமல், தலையையும் வாராமல் கடனே என்று வீட்டிற்குள் அலைந்து கொண்டிருப்பார்கள். இதை எந்த மனைவியும் விரும்புவதில்லை. அந்த தோற்றம் தங்களுக்கு ரசிக்கும்படி இல்லை என்பதை காட்டுவதற்காக, செக்ஸ்க்கு இடம் கொடுக்காமல் பெண்கள் புறக்கணித்துவிடுவார்கள்.
கணவருக்கு பிடித்த நடிகைகள் உண்டு. அதுபோல் மனைவிக்கும் பிடித்த நடிகர்கள் உண்டு என்பதை பெரும்பாலான கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. சினிமாவுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிடிக்காத நடிகரின் படத்தை பார்க்கவைத்துவிடுவார்கள். அதை வெளிப்படுத்திக்கொள்ளாத பெண்கள், ‘என்கிட்டே தானே வருவீங்க.. பார்த்துக்கிறேன்’ என்று தங்களுக்குள் சபதம் எடுத்துக்கொள்வார்கள். வீடு திரும்பியதும், சினிமா பார்த்ததால் தலைவலிக்கிறது என்று கூறிக்கொண்டு கணவரை கண்டுகொள்ளாமலே போய் தூங்கிவிடுவார்கள்.
சினிமாவில் மட்டுமல்ல, சாப்பாட்டு விஷயத்திலும் மனைவியை புறக்கணிக் கும் கணவர்கள் உண்டு. உயர்ந்த ஓட்டலுக்கு அழைத்து செல்வார்கள். ஆனால் மனைவியின் விருப்பத்தை கேட்காமலே தனக்கு பிடித்ததை ஆர்டர் செய்து, மனைவியை அதை சாப்பிடும்படி நிர்பந்திப்பார்கள். அந்த கோபத்தை மனைவி இரவில் படுக்கைஅறையில் காட்டிவிடுவாள்.
இப்படி இதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் ஆண்கள் புரிந்துகொண்டு நடந்தால்தான் பெண்களிடம் இரவு நேரத்தில் பச்சைக்கொடி பறக்கும். வாழ்க்கையும் ருசிக்கும். கணவன்- மனைவி இருவரிடமும் தாம்பத்ய ஆசை குறைந்துபோனால், ஆனந்தம் மறைந்துபோகும்!

Related Tags :
Next Story