கடிகாரங்கள் ஒருபோதும் காலமாவதில்லை..


கடிகாரங்கள் ஒருபோதும் காலமாவதில்லை..
x
தினத்தந்தி 5 Nov 2017 12:45 PM IST (Updated: 5 Nov 2017 12:45 PM IST)
t-max-icont-min-icon

கடிகாரங்கள் தயாரிப்பதில் முன்னோடியான ‘ஸ்விஸ்’ நிறுவனம் தரும் ருசிகரமான தகவல்கள்:

டிகாரங்கள் தயாரிப்பதில் முன்னோடியான ‘ஸ்விஸ்’ நிறுவனம் தரும் ருசிகரமான தகவல்கள்:

* கடிகாரங்கள், முற்காலத்தில் வீட்டில் பெரும் பகுதியை அடைத்து கொண்டிருக்கும் பொருளாகத்தான் இருந்தன. அதனால் பெரிய மாளிகைகள் மற்றும் அரண்மனைகளில் மட்டும் அவைகளை பயன்படுத்தினார்கள். இப்போது அத்தகைய கடிகாரங்கள் காட்சி பொருளாகிவிட்டன. பிற் காலத்தில் அதன் அளவை சிறிதாக்கி, சுவற்றில் தொங்கும்படி வடிவமைத்தார்கள். அதை பலரும் வாங்கினார்கள்.

* நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது எல்லா அதிகாரிகளுக்கும் அரசு செலவில் கடிகாரங்கள் வழங்கப்பட்டன. அரசு அலுவலகங்களிலும் மக்கள் பார்க்கும் விதத்தில் கடிகாரங்கள் தொங்கவிடப்பட்டன.

* முன்பு இந்தியாவில் ஏராளமான சமஸ்தானங்கள் இருந்தன. ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக சமஸ்தான மன்னர்களும், ஜமீன்தார்களும் கடிகாரங்கள் வாங்கினார்கள். அதிக பொருட்செலவில் அலங்கார கடிகாரங்களை வாங்கி மாட்டிக்கொண்டனர்.

* முந்தைய காலத்தில் கடிகாரங்கள் ஆடம்பர பொருளாக இருந்தது. கடிகார தயாரிப்பு நிறுவனங்களின் முகவர்கள் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். தங்கள் நிறுவனம் தயாரிக்கும் கடிகாரங்கள் எப்படி இயங்குகிறது, அதன் சிறப்புகள் என்ன என்று எடுத்துக்கூறி வாங்கத் தூண்டினார்கள்.

* ஐதராபாத் நிஜாம் தன்னுடைய அரண்மனைக்கு மிக அழகான சுவர்கடிகாரம் ஒன்றினை வாங்க விரும்பினார். அதனை ஸ்விஸ் நிறுவனம் உருவாக்கி கொடுத்திருக்கிறது. இன்றும் அந்த கடிகாரம் “ஜலார் ஜங்” அருங்காட்சியகத்தில் அதிசய காட்சிப் பொருளாக உள்ளது. அதைத்தொடர்ந்து பல சமஸ்தானங்கள் சுவர் கடிகாரத்தை விரும்பி வாங்கின. பிறகு பாக்கெட் கடிகாரம் தயாரிக்கப்பட்டது. ஜமீன்தார்கள், அதிகாரிகள், பிரபுக்கள் அதனை கோட் பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தினர்.

* அரண்மனைகளில் மட்டும் வாசம் செய்த கடிகாரங்களை சாதாரண மக்களும் வாங்கி, வீடுகளில் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்க திட்டமிட்டனர். அப்போதுதான் நேரத்தை மட்டும் காட்டாமல், அலாரம் அடித்து எழுப்பும் விதத்திலும் அதை உருவாக்கினார்கள்.

* கைகடிகாரத்தை முதலில் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். பின்னர் பெண்களுக்கேற்ற லேடீஸ் வாட்ச்கள் தயாராயின.

* கைகடிகாரம் பெருமளவு விற்பனையாக பெண்கள்தான் காரணம். தினசரி உபயோகத்திற்கு, விழாக்களுக்கு, அலுவலகத்திற்கு என்று பலவிதமாக பயன்படுத்துகிறார்கள். பள்ளி, கல்லூரிக்கு செல்லும்போது பெரும்பாலும் கறுப்பு நிற பட்டை கொண்ட வாட்ச்களையே அணிகிறார்கள். அலுவலகம் செல்லும்போது மெட்டலிக் வாட்ச்கள் பயன்படுத்துகிறார்கள். விருந்து, விழாக்களுக்கு போகும்போது அழகிய வேலைப்பாடுடன் கூடிய தங்கம், வெள்ளி, கற்கள் பதித்தவைகளை அணிகிறார்கள். வளையல், பிரேஸ்லெட் மாடல் வாட்ச்களை டீன்ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள்.

* பிரபலமான வாட்ச் நிறுவனங்கள், உலகம் முழுவதும் பெண்களின் வாட்ச் விருப்பங்களைப் பற்றி சர்வே எடுக்கிறது. அதில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகவைத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது.

Next Story