மூத்தோர் ஒலிம்பிக் போட்டியின் முன்னணி வீராங்கனை முதுமையில் இளமையாக இருக்க வழிகாட்டுகிறார்
‘எந்த வயதில் சாதிக்கலாம்?’ என்ற கேள்வியை லட்சுமியிடம் கேட்டால், “சாதனைக்கு வயது ஒருபோதும் தடையாக இருப்பதில்லை” என்று பதில் தருகிறார்.

காரணம்?
லட்சுமி 71 வயது முதியவர். சர்வதேச அளவில் தடகளத்தில் சாதனை படைப்பவர். சமீபத்தில் சீனாவில் நடந்த தடகள போட்டியில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்பட 5 விதமான விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்திருக்கிறார். இவரது கணவர் லோகநாதனுக்கு 82 வயது. கோவை ஸ்ரீநகரில் வசித்து வருகிறார்கள்.
சாதனை நாயகியான லட்சுமி தன்னம்பிக்கை தரும் விதத்திலான கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
“எனது சொந்த ஊர் திருப்பூர் கருவம்பாளையம். அங்குள்ள பள்ளியில் படித்துவிட்டு, கோவை நிர்மலா கல்லூரியில் பி.யூ.சி. படிக்க சேர்ந்தேன். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்தேன். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்த வேண்டியதாயிற்று. இருந்தாலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் அப்போதே எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன்.
இதற்கிடையில் எனக்கு திருமணம் நடந்தது. கணவர் கோவையை சேர்ந்தவர். முதல் குழந்தை பிறந்த பின்பு என் கணவரிடம், தொடர்ந்து படிக்கவேண்டும் என்றும் விளையாட்டுத்துறையில் சாதிக்கவேண்டும் என்றும் எனது ஆசைகளை கூறினேன். அப்போது உடற்கல்வி ஆசிரியையாகவேண்டும் என்ற லட்சியம் எனக்கு இருந்தது. எனது கணவர் கோவை தொழில்நுட்ப கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக இருந்தார். அந்த துறை பற்றி படிக்க என்னையும் ஊக்கப்படுத்தினார். நான் சென்னையில் உடற்கல்வி ஆசிரியைக்கான படிப்பை முடித்தேன். அடுத்து எனக்கு வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியை வேலை கிடைத்தது. பின்பு வெவ்வேறு பள்ளிகளில் பணிபுரிந்தேன்.
நான் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்துகொண்டிருந்தாலும் தொடர்ந்து படிக்கவும் செய்தேன். இளங்கலை ஆசிரியப் பயிற்சி, முதுகலை ஆசிரியப் பயிற்சி முடித்தேன். அதை தொடர்ந்து உடற்கல்வி இயக்குனராக பதவி உயர்வு பெற்றேன். அடுத்து எம்.பில். படித்து, பி.எச்டி. ஆய்வு படிப்பையும் பூர்த்தி செய்து கடந்த ஆண்டு முனைவர் பட்டம் பெற்றேன். இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில்தான் இருக்கிறேன்” என்று கூறும் முனைவர் லட்சுமி, விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள பலரை ஊக்குவித்து அவர்களது எதிர்காலத்தை பிரகாசிக்கவும் செய்திருக் கிறார்.
“நான் பணியில் இருந்த காலத்தில் மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த பல்வேறு தன்னார்வ பயிற்சிகளை சொல்லிக்கொடுப்பேன். ஆர்வமுள்ள மாணவிகளுக்கு கூடுதலாக நேரத்தை செலவிடுவேன். இது பல மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைபுரிய ஊக்குவிப்பாக இருந்துள்ளது. அவர்கள் வேலைவாய்ப்பு பெறவும் வழிவகுத்தது.
நான் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இதனால் மூத்தோர் தடகள போட்டியில் பங்கு பெற்றேன். ஒரே ஆண்டில் மாவட்ட அளவில் இருந்து தேசிய அளவு வரை வெற்றி வாகைசூடினேன். அடுத்து 2004-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆசிய மூத்தோர் தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டேன். அங்கு முதல் வெண்கல பதக்கம் பெற்றேன். இந்த வகை ஆசிய விளையாட்டு போட்டி கள் 2 ஆண்டுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு நாட்டில் நடைபெறும். இந்த போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்துள்ளேன். சமீபத்தில் சீனாவில் நடந்த 8-வது ஆசிய தடகள போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 5 பதக்கங்களை பெற்று வந்துள்ளேன்.
2009-ம் ஆண்டு பின்லாந்தில் நடந்த மூத்தோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கு பெற்றேன். அதில் கம்பு ஊன்றி தாண்டும் ‘போல்வால்ட்’ போட்டியில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றேன். அந்த போட்டியில் 94 நாடுகளில் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டோம். இந்த போட்டியை மூத்தோருக்கான ஒலிம்பிக் போட்டி என்று சொன்னார்கள். அதில் நான் சாதனைபடைத்தது மறக்க முடியாத அனுபவம். போட்டிகளுக்காக இதுவரை சிங்கப்பூர், மலேசியா, தைவான், ஜப்பான், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். 108 பதக்கங்களை பெற்றுள்ளேன். இந்த போட்டிகளில் நான் கலந்து கொண்டு சாதனை படைக்க உதவும் எனது பயிற்சியாளர்கள் முரளி, சீனிவாசன் ஆகியோரை மறக்க முடியாது. எனது வெற்றிக்கு கணவர், உறவினர், நண்பர் களும் உறுதுணையாக இருக்கிறார் கள்.
இத்தகைய போட்டிகளில் பங்கேற்க அரசு தரப்பில் ரூ.30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் அது விமான கட்டணத்துக்குகூட போதுமானதாக இல்லை. கடந்த முறை சர்வதேச போட்டியில் பங்கேற்ற போது ரூ.1½ லட்சம் செலவானது. எனது தனிப்பட்ட ஆர்வத்தால், ஓய்வூதிய பணத்தை செலவிட்டு போட்டிகளில் பங்கேற்கிறேன். என்னைப் போன்ற திறமைசாலிகள் பலர் இருந்தும், அவர் களால் செலவு செய்து விளையாடச்செல்ல முடிவதில்லை. அரசு உதவினால் மூத்தோர் தடகள போட்டியில் இந்தியா தனிச்சிறப்பு பெற்று விளங்கும்” என்று கூறும் லட்சுமி, பணி ஓய்வுக்கு பிறகு மீதமுள்ள காலத்தை உற்சாகமாக செலவிட ஆலோசனையும் வழங்குகிறார்.
“பணி ஓய்வு பெற்ற பிறகு அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் உடல் நலத்தை பேணிக்காக்க முடியும். அது பயனுள்ள பொழுதுபோக்காகவும் அமையும். எனது கணவர் லோகநாதன் இன்றும் கைப்பந்து விளையாடுகிறார். இதனால் அவர் 82 வயதாகியும் ஆரோக்கியமாக இருக்கிறார். மேலும் ஓய்வு பெற்ற பிறகு மனதளவில் எந்த சுமையையும் சுமக்கக் கூடாது. வாழ்க்கையில் எப்படித்தான் திட்டமிட்டாலும் பற்றாக்குறையும், பின்னடைவுகளும் இருக்கத்தான் செய்யும். ஆகவே எந்த நிலையிலும் இருப்பதே போதும் என்கிற மனநிலையை கொண்டிருக்க வேண்டும். இது ஓய்வு பெற்றபிறகு வீணான கவலையில் இருந்து நம்மை விடுவிக்கும்.
மேலும் படிப்பு மட்டுமே மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவிடாது. விளையாட்டு திறனும் இருக்க வேண்டும். இதற்கு பெற்றோர் ஊக்கம் அளிக்க வேண்டும். நமது நாட்டில் படிப்பு, படிப்பு என்று விளையாட்டுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். விளையாட்டால் படிப்பு பாதிக்கும் என்ற தவறான எண்ணமும் பெற்றோர்களிடம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
4-ம் வகுப்பு படிக்கும்போதே சிறுவர் சிறுமியர்களை விளையாட்டில் ஊக்குவிக்க பெற்றோர் முன்வரவேண்டும். அவர்களிடம் இருக்கும் திறனை அப்போதே கண்டறிந்து அதற்குரிய பயிற்சிகளை அளிக்கவேண்டும். விளையாடும்போது உடலில் சீரான ரத்த ஓட்டம் ஏற்படும். உடல் உறுப்புகள் சோர்வற்று இயங்கும். அதனால் படிப்பிலும் அவர்கள் சிறந்துவிளங்குவார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது விளையாட்டுத் துறையில் மாணவ-மாணவிகளின் திறன் மேம்பட்டுள்ளது. ஆனால் கட்டமைப்பு வசதிகள் அதற்குதக்கபடி இன்னும் மேம்படுத்தப்படவில்லை. உள் விளையாட்டுஅரங்கங்கள் இன்னும் அதிகளவில் அமைக்க வேண்டும். ஏழை எளிய மாணவ-மாணவிகளிடம் விளையாட்டுத் துறையில் சாதிக்கக் கூடிய திறமை இருந்தாலும், அவர்களுக்கான ஊக்குவிப்பு குறைவாகவே உள்ளது. அத்தகையவர்களை அடையாளங்கண்டு அரசும், தனியார் அமைப்புகளும் ஊக்குவிக்கவேண்டும்” என்றார், முனைவர் லட்சுமி.
இந்த மூத்த தம்பதிகளுக்கு பத்மினி, வித்யா என்கிற இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். ஐ.டி. துறையில் பணிபுரிகின்றனர்.

Related Tags :
Next Story