விசுவ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் அனுப்பர்பாளையம் புதூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர்,
தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் அனுப்பர்பாளையம் புதூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சதாசிவம், இளைஞரணி தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், திருமுருகன்பூண்டி பிரதான ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தீவிரவாதம் இருப்பதாக திரைப்பட நடிகர் கமல்ஹாசன் அவதூறு பரப்பி வருகிறார். இதனால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story