பயணிகள் கூட்டத்தில் பஸ் புகுந்தது: தாய்–மகன் உள்பட 4 பேர் சாவு


பயணிகள் கூட்டத்தில் பஸ் புகுந்தது: தாய்–மகன் உள்பட 4 பேர் சாவு
x
தினத்தந்தி 6 Nov 2017 3:45 AM IST (Updated: 6 Nov 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் கூட்டத்தில் பஸ் புகுந்த விபத்தில் தாய்–மகன் உள்பட 4 பேர் இறந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கண்ணூர்,

கண்ணூரில் இருந்து பழைய அங்காடி நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். கண்ணூரை அடுத்த பய்யனூர் அருகே சென்ற போது திடீரென பஸ் பழுதானதால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. அந்த பஸ்சில் தொடர்ந்து செல்ல முடியாது என்பதால் பஸ்சில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் வேறு பஸ்சில் செல்வதற்காக சாலையின் மறுபுறம் காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த கண்ணூரை சேர்ந்த சுபைதா (வயது 40), இவருடைய மகன் முஷித் (18), சுஜித்பட்டேரி (35), முஸ்தபா (50) உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுபைதா, முஷித், சுஜித்பட்டேரி, முஸ்தபா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பய்யனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 4 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story