கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்பு
கடலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. கடலூரில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவித்தனர்.
கடலூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தெற்கு ஆந்திர கடலோரத்தில் இருந்து தமிழக கடலோர பகுதி வரை நீடித்ததால் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை விட்டு, விட்டு நேற்று அதிகாலை வரை பெய்தது. இதற்கிடையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு நிலையாக வலு குறைந்து வருகிறது. மன்னார் வளைகுடாவையொட்டி தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு கடலோர பகுதியில் வளிமண்டலத்தில் சுழற்சி நீடிக்கிறது.
இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கடலூரில் நேற்று காலை முதல் மதியம் 12 மணி வரை வெயில் அடித்தது. அதன்பிறகு திடீரென கருமேகங்கள் திரண்டன. சற்று நேரத்தில் மழை பெய்தது. இந்த மழை 30 நிமிடம் நீடித்தது. அதன்பிறகு மழை இல்லை. வானம் மேக மூட்டமாக இருந்தது. மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மழை பெய்தது. ஆனால் திட்டக்குடி பகுதியில் இரவில் நல்ல மழை பெய்தது.
இருப்பினும் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை பெய்த கன மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. கடலூர் கூத்தப்பாக்கம் பெருமாள்நகர், ஜனார்த்தனன்நகர், விஜயலட்சுமிநகர், சக்திநகர், திருப்பாதிரிப்புலியூர் சக்திநகர், முதுநகர் சுத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக முட்டளவிற்கு தேங்கி கிடந்த தண்ணீரில் தத்தளித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது.
குமராட்சி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, சான்றோர்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அவற்றை வாய்க்கால்களில் வடிய வைக்கும் வேலையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மழைக்கு பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. கடலூர் கெடிலம், தென்பெண்ணையாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடல் சீற்றம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி உள்பட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சிலர் மட்டும் மீன்பிடிக்க சென்று திரும்பினர்.
கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் வீராணம் ஏரிக்கு அதிகளவு தண்ணீர் வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 45.05 அடியாக உயர்ந்துள்ளது. எனவே ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பில் உள்ள வி.என்.எஸ். மதகு வழியாக நேற்று 2-வது நாளாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நெல்லிக்குப்பம் மாருதி நகர், காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப் பட்டனர். பெண்ணாடம் அருகே சின்னகொசப்பள்ளத்தில் மழையால் காமராஜ் என்பவருடைய வீட்டின் சுவர் இடிந்து, அருகில் உள்ள ரங்கநாதன் என்பவரின் குடிசை வீட்டில் விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தது.
சிதம்பரம் நகரில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், பாசிமுத்தான் ஓடை வழியாக பாலமான் வாய்க்காலுக்கு செல்கிறது. ஆனால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் வாகீச நகரில் உள்ள பாலத்தில் ஆகாய தாமரைகள், கழிவுகள் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே அதில் உள்ள ஆகாய தாமரைகள் மற்றும் கழிவுபொருட்களை அகற்றி மழைநீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் வறண்டு கிடந்த அணைக்கட்டு தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story