அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்


அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 6 Nov 2017 3:45 AM IST (Updated: 6 Nov 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

முக்கிய பிரமுகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துவரும் விவகாரத்தில் அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கருத்தப்படும் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மும்பை ஐகோர்டில் பொதுநலன் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் வழங்கப்படும் பாதுகாப்பால் அரசு தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. மேலும் போலீசில் ஆள் பற்றக்குறை பிரச்சினையும் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, போலீசாரில் ஒன்றும் தனிநபர் பாதுகாவல்கள் அல்ல, அவர்கள் மிக முக்கியமான தேவைகளுக்காக மட்டுமே இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அப்படியே பயன்படுத்தினாலும் அவர்களிடம் அதற்கான கட்டணத்தை வசூலிக்கவேண்டும். தேவையில்லாமல் அரசு பணத்தை வீணாக்கக்கூடாது என தெரிவித்தது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முக்கிய பிரமுகர்களிடம் பாதுகாப்பு பணிக்கு பணம் வசூலிப்பது குறித்து சரியான முடிவு எடுக்காத அரசுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

‘அரசு சார்பில் இதுகுறித்து முடிவு எடுக்க தொடர்ந்து கூட்டம் கூட்டப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இதுவரை எதையும் செய்யவில்லை. அடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன் அரசு இதுகுறித்து சரியான முடிவு எடுக்கவில்லை என்றால். நானே முழுமையான உத்தரவை பிறப்பிப்பேன்’ என நீதிபதி மஞ்சுளா செல்லூர் கூறினார்.

இந்த வழக்கு வரும் 16–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story