நடிகர் நானா படேகருக்கு, ராஜ்தாக்கரே கண்டனம்


நடிகர் நானா படேகருக்கு, ராஜ்தாக்கரே கண்டனம்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:30 AM IST (Updated: 6 Nov 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசிய நடிகர் நானா படேகருக்கு, ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலையத்தில் 21 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்திற்கு நடைபாதை வியாபாரிகளே காரணம் என கூறி நவநிர்மாண் சேனா கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் நடைபாதை வியாபாரிகளின் பொருட்களை சூறையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் நானா படேகர் நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ நடைபாதை வியாபாரிகள் ஒரு தவறும் செய்யவில்லை. அவர்கள் தங்கள் வயிற்று பிழைப்பிற்காக தொழில் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காதது அரசு மற்றும் மாநகராட்சியின் தவறு ’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு நவநிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:–

படேகர் சிறந்த நடிகர் ஆனால் ஒரு வி‌ஷயத்தை பற்றி ஒன்றும் தெரியாமல் அவர் கருத்து கூறக்கூடாது. நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்துவது அரசின் கடமை, அதை நாங்கள் செய்யக்கூடாது என்று அவர் கருதினால். அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதும் அரசின் கடமை தான் அதற்காக ஏன் அவர் (நாம்) தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

நடைபாதை வியாபாரிகள் ஏழைகள் என்று அவர் சொல்கிறார், அதேபோல் தினமும் ரெயில் வந்து செல்பவர்கள் ஒன்றும் லட்சக்கணக்கில் சம்பவம் வாங்குபவர்கள் கிடையாது.

ஐகோர்ட்டு நடைபாதை வியாபாரிகள் குறித்து வழங்கிய தீர்ப்பில்இ குறிப்பிட்ட போலீஸ் சரகத்திற்குள் நடைபாதை வியாபாரிகள் கண்டறியப்பட்டால், சம்பவத்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரலாம் என தெரிவித்துள்ளது.

அதன்படி இனி நடைபாதை வியாபாரிகள் யாரையும் நான் பார்த்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவேன்.


Next Story