ரோட்டரி சங்கங்கள் சார்பில் இலவச இதய பரிசோதனை முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


ரோட்டரி சங்கங்கள் சார்பில் இலவச இதய பரிசோதனை முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:30 AM IST (Updated: 6 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ரோட்டரி சங்கங்களின் சார்பில் இலவச இதய பரிசோதனை முகாம் நடந்தது. இதனை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

வேலூர்,

வேலூர் ஊரீஸ் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3231-ன் கீழ் வேலூர் பகுதியை சேர்ந்த 13 ரோட்டரி சங்கங்கள் மற்றும் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை இணைந்து இலவச இதய பரிசோதனை முகாமை நடத்தியது. ரோட்டரி மாவட்ட கவர்னர் ஜவரிலால் ஜெயின் தலைமை தாங்கினார். வரும் ஆண்டுகளில் கவர்னராக பொறுப்பேற்கும் சந்திரபாப், ஸ்ரீதர் பலராமன், ஊரீஸ் கல்லூரி முதல்வர் ஸ்டான்லி ஸ்டோன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை ஆடிட்டர் பாண்டியன் மற்றும் இணை தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இதில் பச்சையப்பாஸ் சில்க்ஸ் சுந்தர்கணேஷ், உதவி கவர்னர் சுந்தர்ராஜன், ஒலிம்பியாட் தலைவர் முரளிதரன், ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, இதய நோய் சிகிச்சை டாக்டர்கள் முத்துக்குமரன், முஸ்தபா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

தொடங்கி வைத்தார்

சிறப்பு விருந்தினராக கலெக்டர் ராமன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த பரிசோதனை முகாமில் பல பயனாளிகள் பங்கேற்று பயன் பெற்றனர். முடிவில் மாவட்ட செயலாளர் ஜே.கே.என்.பழனி நன்றி கூறினார். 

Next Story