பட்டுக்கோட்டை அருகே புயல் பாதுகாப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் கலெக்டர் அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா நரசிங்கபுரம், தம்பிக்கோட்டை ஆகிய கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.
பட்டுக்கோட்டையை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தினை ஆய்வு செய்த கலெக்டர் அண்ணாதுரை பேரிடர் காலத்தில் பாதிப்புக்குள்ளாகும் மக்களை தங்க வைப்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
அவசர காலங்களில் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும், கால்நடைகளை தங்க வைப்பதற்கு தேவையான வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சியில் கடல் முகத்துவாரத்தில் வெள்ள நீர் வடியும் இடத்தினை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, தாசில்தார் ரகுராமன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story