மூத்த பத்திரிகையாளர் மோகன் மரணம் மு.க.ஸ்டாலின் இரங்கல்


மூத்த பத்திரிகையாளர் மோகன் மரணம் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 6 Nov 2017 3:45 AM IST (Updated: 6 Nov 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

மூத்த பத்திரிகையாளரான மோகன் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 53). மூத்த பத்திரிகையாளரான இவர் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மோகன் ‘தினகரன்’ நாளிதழில் நிருபராக பணியாற்றி வந்தார். சென்னை பத்திரிகையாளர் சங்கம் (எம்.யூ.ஜே.) பொதுச்செயலாளர், சென்னை பிரஸ் கிளப் செயலாளராக பொறுப்பு வகித்தவர். மோகன் உடல் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவருடைய உடலுக்கு ‘நக்கீரன்’ கோபால் உள்பட பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரதராமி என்ற கிராமத்தில் மோகனின் இறுதிச்சடங்கு இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது.

மரணமடைந்த மோகனுக்கு சசிகலா என்ற மனைவியும், பார்த்தசாரதி, விஜயசாரதி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மோகன் மறைவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் இரா.காமராசு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story