வெள்ளை புலிகளுக்கு தொற்று நோய் வராமல் தடுக்க அதிவேக மின்விசிறிகள்


வெள்ளை புலிகளுக்கு தொற்று நோய் வராமல் தடுக்க அதிவேக மின்விசிறிகள்
x
தினத்தந்தி 6 Nov 2017 3:41 AM IST (Updated: 6 Nov 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகளுக்கு தொற்று நோய் வராமல் தடுக்க அதிவேக மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகளை பார்வையாளர்கள் பார்க்க மழை இல்லாத நேரத்தில் கூண்டில் இருந்து திறந்து விடப்படுகிறது. மழை நேரத்தில் அவை இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்படுகிறது.

நீண்ட நேரம் கூண்டுக்குள் புலிகள் இருப்பதால் அதனுடைய உடலில் அதிக அளவு ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் தொற்று நோய்கள் வராமல் இருக்க இரும்பு கூண்டுக்கு வெளியே 2 அதிவேக மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சில நாட்களாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்துவிடாமல் இருக்க 5 முக்கிய விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் தலா 100 மணல் மூட்டைகள் மூலம் அரண் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் சில இடங்களில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீரை மின்மோட்டார் மூலம் ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

இது குறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது வெள்ளை புலிகளுக்கு மட்டும் மின் விசிறிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 5 மின்விசிறிகள் புதியதாக வாங்கிய பிறகு சிங்கம், வங்கப்புலி, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுக்கு வெளியே பொருத்தப்படும். இதனால் விலங்குகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படாது’ என்றனர்.


Next Story