சேலம் அருகே, பிரித்து விடுவார்கள் என பயந்து காதல் ஜோடி விஷம் குடித்தனர்
சேலம் அருகே தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்து காதல் ஜோடி விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓமலூர்,
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மோளாண்டிபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஓமலூர் அருகே உள்ள தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி தினமும் மினி பஸ்சில் ஓமலூருக்கு வந்து பயிற்சி நிறுவனத்திற்கு செல்வது வழக்கம்.
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (23), லாரி கிளனர். இவர் ஓமலூர் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க அடிக்கடி வருவார்.
இந்த நிலையில் ஓமலூருக்கு வந்து சென்ற போது, சரவணக்குமாருக்கும், நர்சிங் டிப்ளமோ மாணவிக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இவர்கள் காதலித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதல் விவகாரம் தெரிந்து இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தங்களை பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்று பயந்து இருவரும் கடந்த 2-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினர்.
பின்னர் அவர்கள் ஆத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் உதவியுடன் அங்கு தங்கினர். இதனிடையே தன்னுடைய மகள் மாயமானது குறித்து மாணவியின் தந்தை ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, காதல் ஜோடி ஆத்தூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனே விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் காதல் ஜோடியிடம் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் மாலையில் போலீஸ் நிலையத்துக்கு வருவதாக கூறி உள்ளனர்.
பின்னர் அந்த காதல் ஜோடியினர் தங்கள் நண்பர்களிடம் போலீஸ் நிலையத்திற்கு செல்ல உள்ளதாகவும், ஆத்தூர் பஸ் நிலையத்திற்கு வருமாறும் கூறி உள்ளனர். மாலையில் பஸ் நிலையத்திற்கு வந்த காதல் ஜோடி ஒரு வேளை போலீஸ் நிலையத்தில் தங்களை பிரித்து விடுவார்களோ? என பயந்து, ஆத்தூரில் உள்ள ஒரு கடையில் விஷ மருந்தை வாங்கி அதை குளிர்பானத்தில் கலந்து குடித்தனர்.
இதனிடையே அங்கு வந்த நண்பர்களுடன், ஆத்தூரில் இருந்து ஓமலூருக்கு பஸ்சில் அவர்கள் புறப்பட்டு வந்தனர். அங்கு வந்து இறங்கிய சிறிது நேரத்தில் காதல் ஜோடியினர் மயங்கி விழுந்தனர்.
அப்போது தான் அவர்கள் விஷம் குடித்தது தெரியவந்தது. உடனே அந்த மாணவியை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக கொண்டு வந்தனர். அதே நேரத்தில் சரவணக்குமார் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு காதல் ஜோடிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story