கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி அலுவலர்கள்–ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உள்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் மகுடபதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story