கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள்–விவசாயிகள் போராட்டம்

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மதுரை,
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் சிலர் அங்கு வந்தார்கள். அவர்கள் மேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒருபோக பாசன விளைநிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரி அங்கு உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். அதன்பின் கலெக்டர் வீரராகவராவை சந்தித்து மனுகொடுத்தனர்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கு உரிய நேரத்தில் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலில் போராட்டம் செய்தார்கள். ஆர்.டி.ஓ.கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.