தஞ்சை மாவட்டத்தில் மழை நீடிப்பு கும்பகோணத்தில் அதிகபட்சமாக 60 மி.மீ. பதிவானது
தஞ்சை மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. கும்பகோணத்தில் அதிகபட்சமாக 60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. நேற்று காலை முதல் அவ்வப்போது லேசான தூறலுடன் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைநீடித்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அதிகபட்சமாக 60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
மழை அளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைஅளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அதிராம்பட்டினம் 26, கும்பகோணம் 60, பாபநாசம் 42, தஞ்சாவூர் 5, திருவையாறு 26, திருக்காட்டுப்பள்ளி 23.6, வல்லம் 7, கல்லணை 11, அய்யம்பேட்டை 34, திருவிடைமருதூர் 58.2, மஞ்சளாறு 60.6, நெய்வாசல் தென்பாதி 8, பூதலூர் 14.6, வெட்டிக்காடு 37.6, ஈச்சன்விடுதி 22, ஒரத்தநாடு 19.2 மதுக்கூர் 10.6, பட்டுக்கோட்டை 8, பேராவூரணி 19.2, அணைக்கரை 31.2, குருங்குளம் 17.

Related Tags :
Next Story