ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிஓடிய விசாரணை கைதி 20 மணிநேரத்தில் சிக்கினார்
மும்பையில் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிஓடிய விசாரணை கைதி 20 மணி நேரத்தில் போலீசாரிடம் சிக்கினார்.
மும்பை,
மும்பை, வி.பி. ரோடு போலீசார் சமீபத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக சஞ்சய்(வயது19) என்ற வாலிபரை கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்த போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே அவர் சிகிச்சைக்காக ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தன்று சஞ்சய் சிறுநீர் கழிக்கவேண்டும் என கூறினார்.
எனவே காவலில் இருந்த போலீஸ்காரர் அவரது கைவிலங்கை கழற்றிவிட்டார். இந்தநிலையில் கழிவறை சென்ற விசாரணை கைதி சஞ்சய் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிஓடினார்.
ரெயில்நிலையத்தில் சிக்கினார்
இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தப்பிஓடிய வாலிபரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்த னர். மேலும் அனைத்து போலீஸ் நிலையங்கள், ரெயில்வே போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தப்பிஓடிய 20 மணி நேரத்தில் சஞ்சய் பயந்தர் ரெயில் நிலையத்தில் போலீசாரிடம் சிக்கினார். அவர் ரெயில் மூலம் விரார், பால்கர் வழியாக குஜராத் தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சஞ்சய் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story