மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக வானூரில் 76 மி.மீ பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வானூரில் 76 மி.மீ பதிவானது.
விழுப்புரம்,
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கிறது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே பலத்த மழை பெய்து வருகிறது. மற்ற இடங்களில் அவ்வப்போது பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 3 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதையடுத்து இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. நள்ளிரவிலும் நீடித்த மழை விடிய, விடிய தூறிக்கொண்டே இருந்தது. அவ்வப்போது இடையிடையே பலத்த மழையாகவும் கொட்டி தீர்த்தது.
இதனால் விழுப்புரம் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக விழுப்புரம் சுதாகர் நகர், கணபதி நகர், மணி நகர், மகாராஜபுரம், தேவநாதசாமி நகர், பாண்டியன் நகர், கம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதேபோல் வானூர், திண்டிவனம், மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. திண்டிவனம் பகுதியில் பெய்த பலத்த மழையினால் வகாப் நகரில் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோல் வானூர் அருகே தைலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திலும் தண்ணீர் தேங்கியது. மேலும் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, மேல்மலையனூர், திருக்கோவிலூர், திருவெண்ணெய் நல்லூர், மயிலம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற இடங்களில் மிதமான மழை பெய்தது. நேற்று காலையும் மாவட்டத்தின் பல இடங்களில் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெரும்பாலான ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. அதுபோல் அணைகளின் நீர்மட்டமும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 293.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வானூரில் 76 மி.மீ மழையும், குறைந்தபட்சமாக திருக்கோவிலூரில் 14 மி.மீ. மழையும் பதிவாகியது. இதர பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- செஞ்சி-15, திண்டிவனம்- 40, விழுப்புரம் 31, உளுந்தூர்பேட்டை- 22, சங்கராபுரம் 16, கள்ளக்குறிச்சி- 30.20, மரக்காணம்- 49.

Related Tags :
Next Story