பிரேக் பிடிக்காததால் சாலையில் வழுக்கியபடி சென்ற மினி பஸ் சேற்றில் சிக்கி நின்றது
பிரேக் பிடிக்காததால் சாலையில் வழுக்கியபடி சென்ற மினி பஸ் சேற்றில் சிக்கி நின்றது. அந்த பஸ் பள்ளத்தில் கவிழாததால் பயணிகள் உயிர் தப்பினர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து நெடுகுளா ஊராட்சி கம்பட்டி கிராமத்துக்கு ஒரு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ், கன்னேரிமுக்கு, பனகம்பை, ஜெக்கலோடை வழியாக கம்பட்டி கிராமத்துக்கு செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அந்த மினி பஸ் கம்பட்டியில் இருந்து கோத்தகிரிக்கு 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஜெக்கலோடை கிராம சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. பஸ் ஜெக்கலோடைக்கு வந்தபோது டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது சாலையில் அதிகளவில் சேறு இருந்ததால் பிரேக் பிடிக்காமல் வழுக்கியபடி பஸ் சென்றது. பின்னர் பஸ் சாலையை விட்டு இயங்கி அங்கிருந்த தேயிலை தோட்டத்தில் தேங்கி இருந்த சேற்றில் சிக்கி நின்றது.
தேயிலை தோட்டம் அமைந்துள்ள பள்ளத்தில் கவிழ்ந்துவிடாமல் சாய்ந்தவாறு பஸ் நின்றது. இதையடுத்து உடனடியாக பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக இறங்கினார்கள். இரவு நேரம் என்பதால் உடனடியாக அந்த பகுதியில் மீட்பு பணி மேற்கொள்ளப்படவில்லை.
இதனையடுத்து சேற்றில் சிக்கிய அந்த மினி பஸ்சை நேற்று காலையில் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணி நடந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் அந்த மினி பஸ் மீட்கப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
ஜெக்கலோடை கிராம பகுதியில் சாலையோரத்தில் தனியார் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு பள்ளம் தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து 3 நாட்களாக பெய்த மழை காரணமாக அந்த மண், மழை நீரில் அடித்து வரப்பட்டு இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்த சாலையில் குவிந்தது.
மேலும், மண் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரும் சாலையில் வழிந்தோடுகிறது. இதில் வாகனங்கள் சென்று வந்ததால் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்ட சாலை செம்மண் சேறு நிறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் சேறு நிறைந்த அந்த சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கி விபத்தில் சிக்கியது. பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். சேற்றில் சிக்கி பஸ் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர்.
சாலையில் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சாலையில் உள்ள மண்ணை அகற்றி, கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story