அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்


அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
x
தினத்தந்தி 7 Nov 2017 3:00 PM IST (Updated: 7 Nov 2017 12:28 PM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தொண்டி,

திருவாடானையில் நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி அளவிலான நிர்வாகிகள் மற்றும் செயல்வீ ர ர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சோளியக்குடி நாகூர்கனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பத்மநாபன், மகளிர் பாசறை செயலாளர் புனிதா சண்முகம், தொகுதி செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் திருவாடானை ஒன்றிய செயலாளர் ராம்கி வரவேற்றார்.

கூட்டத்தில் திருவாடானை அரசு கல்லூரிக்கு தேவையான பேராசிரியர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக அனுமதித்து விரைவில் பணி நியமனம் செய்து மாணவ-மாணவிகளின் கல்வியை பாதுகாக்க வேண்டும்.
திருவாடானை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கொடியேற்றுவது, புதிய கிளைக்கழகம் அமைப்பது, பொதுமக்களுக்கான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பது என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் வக்கீல் அறிவுச்செல்வன், மாநில மீனவர் பாசறை செயலாளர் வக்கீல் டோமினிக் ரவி, மாநில மகளிர் பாசறை செயலாளர் இலக்கியா, சிவகங்கை மாவட்ட செயலாளர் சாயல்ராம், மாவட்ட மீனவரணி செயலாளர் கமல், மகளிர் பாசறை இணை செயலாளர் புவனேசுவரி, இளைஞர் பாசறை இணை செயலாளர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் தொகுதி இணை செயலாளர் காளசுவரன் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து திருவாடானை வடக்கு தெருவில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை மாநில இளைஞர் பாசறை செயலாளர் வக்கீல் அறிவுச்செல்வன் திறந்து வைத்தார்.

Next Story