டீசல் இல்லாமல் நின்ற லாரியால் தூத்துக்குடி–திருச்செந்தூர் இடையே போக்குவரத்து பாதிப்பு


டீசல் இல்லாமல் நின்ற லாரியால் தூத்துக்குடி–திருச்செந்தூர்  இடையே போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2017 3:00 AM IST (Updated: 8 Nov 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

டீசல் இல்லாமல் உப்பாற்று ஓடை பாலத்தில் லாரி நின்றதால், தூத்துக்குடி–திருச்செந்தூர் இடையே ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஸ்பிக்நகர்,

டீசல் இல்லாமல் உப்பாற்று ஓடை பாலத்தில் லாரி நின்றதால், தூத்துக்குடி–திருச்செந்தூர் இடையே ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடியை அடுத்த முள்ளக்காடு அருகே உள்ள உப்பாற்று ஓடை பாலத்தில் நேற்று மாலையில் மதுரை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த லாரி, டீசல் இல்லாமல் பாலம் நடுவே நின்றது. இதனால் பாலத்திற்கு இருபுறமும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுத்து நின்றன. இதனால் தூத்துக்குடி–திருச்செந்தூர் மார்க்கத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பழைய பாலம்

இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த பாலத்தில் இருந்து லாரி அப்புறப்படுத்தப்பட்டதால், போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மேலும், இந்த உப்பாற்று பாலம் நடுவே ஆங்காங்கே சேதம் அடைந்து பள்ளங்கள் காணப்படுகின்றன. சாதாரண நேரத்திலேயே வாகனங்கள் அந்த பாலத்தில் ஊர்ந்து தான் செல்லும். இதனால் வாகன ஓட்டிகள் முகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

புதிய பாலம்...

இந்த நிலையில் அதன் அருகே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அதனை வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு உடனடியாக திறக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.


Next Story