பணம் மதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து விழுப்புரத்தில் இன்று இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
பண மதிப்பு நீக்கத்தால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த நாளை கருப்பு நாளாக கடைபிடித்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திட இடதுசாரி கட்சிகளும், எதிர்கட்சிகளும் அழைப்பு விடுத்து இருக்கின்றன.
திருக்கோவிலூர்,
விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–
1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இத்தகைய பண மதிப்பு நீக்கத்தால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த நாளை கருப்பு நாளாக கடைபிடித்து மத்திய அரசை கண்டித்து நாளை(அதாவது இன்று) ஆர்ப்பாட்டம் நடத்திட இடதுசாரி கட்சிகளும், எதிர்கட்சிகளும் அழைப்பு விடுத்து இருக்கின்றன.
அதன்படி விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை(அதாவது இன்று) மாலை 3 மணிக்கு இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. எனவே விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி, சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா ஆகிய கட்சியினர் திரளாக கலந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.