பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் மீதான வழக்கு; அடுத்த மாதம் 5-ந்தேதிக்கு தள்ளிவைப்பு


பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் மீதான வழக்கு; அடுத்த மாதம் 5-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 8 Nov 2017 4:30 AM IST (Updated: 8 Nov 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் மீதான வழக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கரூர்,

கரூர் வெங்கமேட்டில் பெண் மாவோயிஸ்டுகள் சந்திரா, கலா ஆகிய 2 பேரை கியூ பிரிவு போலீசார் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்தனர். மேலும் 2 பேருக்கும் உதவியதாக வக்கீல் முருகன் கைது செய்யப்பட்டார். சந்திரா, கலா ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், முருகன் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக சந்திரா, கலா, வக்கீல் முருகன் ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சியில் இருந்து வேனில் கரூர் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர்.

கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் 3 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் 3 பேருக்கும் அதுவரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்தார். இதைதொடர்ந்து சந்திரா, கலா, வக்கீல் முருகன் ஆகிய 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் வேனில் திருச்சிக்கு அழைத்து சென்றனர். 

Related Tags :
Next Story