திருவாரூர் அருகே காட்டாற்று கரை அரிப்பினால் கூரை வீடு இடிந்து விழுந்தது
திருவாரூர் அருகே காட்டாற்று கரை அரிப்பினால் கூரை வீடு இடிந்து விழுந்தது.
திருவாரூர்,
தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 3 ஆயிரம் குளங்கள் மழையினால் நிரப்பி வருகி்ன்றன. மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளும் சேதம் அடைந்து போக்குவரத்து பயனற்ற நிலையில் உள்ளன.
கன மழையினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த 5 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மழையினால் பாதிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டன.
இதில் திருவாரூர் பூதமங்கலச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொரடாச்சேரி ஒன்றியத்தில் கீழஉத்தரங்குடி, முசிறியம், தென்பாதி, நீலக்குடி, எண்கண், மேலராதாநல்லூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள், கோட்டூர் ஒன்றியத்தில் சின்னகுருவாடி, வீராக்கி, 57குலமாணிக்்கம், தாதன் திருவாசல் ஆகிய 4 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள் மற்றும் வலங்கைமான் கோவிந்தங்குடி, குடவாசல் திருவீழிமிழலை ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 13 பள்ளிகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக கருதப்பட்டு நேற்றும் அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் 13 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் நேற்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. காலை முதல் மழை நின்று வெயில் அடித்தது. இந்த நிலையில் மதியம் 1 மணிக்கு வானில் கருமேக கூட்டம் சூழ்ந்து திடீரென தூறலுடன் தொடங்கி கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் கூடூர் காட்டாற்றில் குறுகிய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தரை பாலத்தின் வழியாக தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தரை பாலத்தை உடைத்து தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் புதிய பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டது.
காட்டாற்றில் அதிகமான தண்ணீர் செல்வதால் புதிய பாலத்தின் வழியாக பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் காட்டாற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடுவதால் கரை அரிப்பு ஏற்பட்டு கூரை வீடு இடிந்து விழுந்தது. மேலும் கூத்தங்குடி செல்லும் பாதையில் ரெயில்வே பாலம் கட்டப்பட்டு வரும் இடத்தில் காட்டாற்றின் கரையோற சாலை இடிந்து விழுந்தது.
மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் முழ்கியுள்ள நிலையில் மழை தொடர்வதால் வெள்ள நீர் வடிவதில் தாமதமாகி வருகின்றது. கன மழை நீடித்தால் பயிர் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story