வீடுகளில் தண்ணீர் புகுந்ததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வீடுகளில் தண்ணீர் புகுந்ததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட நும்பல் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் கூறியதாவது:-
நும்பல் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காலம் காலமாக வசித்து வருகிறோம்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
எங்கள் பகுதியில் வடிகால்வாய் வசதி முறையாக செய்யப்படாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் வெளியே செல்லமுடியாமல் எங்கள் குடியிருப்பை சுற்றி குளம்போல் காட்சியளிக்கிறது. இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. ஆகவே மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதாக தெரிவித்தார்கள்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை அதிகாரிகளிடம் அளித்துவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story