கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மந்திரி கே.ஜே.ஜார்ஜுக்கு எதிராக போராடுவது குறித்து ஆலோசனை


கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  மந்திரி கே.ஜே.ஜார்ஜுக்கு எதிராக போராடுவது குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 8 Nov 2017 2:30 AM IST (Updated: 8 Nov 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை(வியாழக்கிழமை) மங்களூருவில் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை(வியாழக்கிழமை) மங்களூருவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், மந்திரி கே.ஜே.ஜார்ஜுக்கு எதிராக போராடுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

மாற்றத்திற்கான பயணம்

கர்நாடக பா.ஜனதா சார்பில் ‘மாற்றத்திற்கான பயணம்’ எடியூரப்பா தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயணம் கடந்த 2–ந் தேதி பெங்களூருவில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அந்த கூட்டத்தில் எதிர்பார்த்ததை விட கட்சி தொண்டர்கள் குறைவான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இதனால் அமித்ஷா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை(வியாழக்கிழமை) மங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளரான மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்பட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில், எடியூரப்பா மேற்கொண்டுள்ள பயணத்திற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு குறித்தும், பெங்களூருவில் கூட்டம் குறைவாக இருந்தது ஏன் என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

வேட்பாளர்கள் தேர்வு

மேலும் கர்நாடக மேல்–சபையில் காலியாகும் இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. அன்றைய தினமே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெலகாவியில் அடுத்த வாரம் தொடங்கும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் எந்ததெந்த பிரச்சினைகளை கிளப்ப வேண்டும் என்பது குறித்தும் அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது.

சட்டசபை கூட்டம் நடைபெறும்போது எடியூரப்பாவின் பயணத்தில் தலைவர்கள் யார்–யார் கலந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடக்கவுள்ளது. மேலும் போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மந்திரி கே.ஜே.ஜார்ஜுக்கு எதிராக சட்டசபையில் போராடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.


Next Story