நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் கலெக்டர் ரோகிணி ஆய்வு


நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 8 Nov 2017 4:00 AM IST (Updated: 8 Nov 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியாப்பட்டணத்தில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் கலெக்டர் ரோகிணி ஆய்வு

சேலம்,

சேலத்தை அடுத்துள்ள அயோத்தியாப்பட்டணத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் தங்கள் பகுதியை மேம்படுத்த வேண்டும் என்று நேற்று முன் தினம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் நேற்று கலெக்டர் ரோகிணி அந்த நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நரிக்குறவரின் குழந்தையை தூக்கி வைத்து கொண்டு பேசினார். மேலும் உங்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர்களிடம் கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், சேலம் உதவி கலெக்டர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story