பணமதிப்பு நீக்க நடவடிக்கை: மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்தும் கோவை டாடாபாத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை,
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோவை டாடாபாத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், இந்திய கம்யூ னிஸ்டு கட்சி(எம்.எல்.) மாவட்ட செயலாளர் தாமோதரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், ஆர்.கருமலையான், என்.அமிர்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்.ஏ.கோவிந்தராஜன், அஷ்ரப்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story