நெல்லை அருகே டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் ஆய்வு


நெல்லை அருகே டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Nov 2017 4:15 AM IST (Updated: 9 Nov 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கிராமம், கிராமமாக சென்று ஆய்வு செய்து வருகிறார். அவர் நேற்று நெல்லை அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியில் ஆய்வு செய்தார். அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சென்று கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

அப்போது நடுவக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டு துப்புரவு பணியை பார்வையிட்டார். தூய்மைப்பணியில் நெல்லை சுகாதார பணிகளின் துணை இயக்குனர் செந்தில் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகத்தாய், ஆறுமுககனி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் நெல்லை மாவட்ட வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் பழனி, செங்குளம் கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை ஆய்வு செய்தார். அவர், அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர். 

Related Tags :
Next Story