ஆட்டையாம்பட்டி பகுதியில் 2 கொள்ளையர்கள் கைது 16½ பவுன் நகை மீட்பு

ஆட்டையாம்பட்டி பகுதியில் 2 கொள்ளையர்களை கைது செய்த போலீசார், 16½ பவுன் நகையை மீட்டனர்.
ஆட்டையாம்பட்டி,
ஆட்டையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றதை அடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், நேற்று ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், சென்னகிரி ஊராட்சி இருசனாம்பட்டி செட்டியார் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற கார்த்திகேயன்(வயது 22), முத்து என்ற முத்துக்குமார்(23) ஆகியோர் என்பதும், இவர்கள் இருவரும் ஆட்டையாம்பட்டி, மல்லூர், மல்லசமுத்திரம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொள்ளை அடித்த நகைகளை கார்த்திக் வீட்டின் குளியல் அறையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றி, கல்லுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து 16½ பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
மீட்கப்பட்ட நகைகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆட்டையாம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான இருவரும் ஏற்கனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைதான பழைய குற்றவாளிகள் ஆவார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலைய பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டதாக இருசனாம்பட்டி செட்டியார் தெரு பகுதியை சேர்ந்த சீனி என்ற சீனிநாதன், பாலம்பட்டி அக்ரபாளையம் பகுதியை சேர்ந்த குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story