கோவை-சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் ஓடும் ‘சேரன் எக்ஸ்பிரஸ்’ ரெயிலின் பெட்டிகள் அதிநவீனமாக மாற்றம்
கோவை-சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் ஓடும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அதிநவீனமாக மாற்றப்பட்டு நாளை முதல் இயக்கப்படுகிறது.
சூரமங்கலம்,
இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்திய ரெயில்வே துறை பயணிகளின் ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாகவும், சுகமாகவும் மாற்ற எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அனைத்து ரெயில் பெட்டிகளும் பாதுகாப்பான எல்.எச்.பி. ரெயில் பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவின் தொடர் முயற்சியின் காரணமாக கோவை-சென்னை சென்ட்ரல் இடையோன வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அதிநவீன மற்றும் பாதுகாப்பான எல்.எச்.பி.(லிங்க் ஹாப்மான் புஷ் அல்ஸ்தாம்) ரெயில் பெட்டிகளாக மாற்றப்படுகிறது. இந்த நவீன ரெயில் பெட்டிகள் பொருத்தப்பட்டு நாளை(வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. நாளை இரவு 10.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.20 மணிக்கு சேலம் ஜங்சனுக்கு வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.45 மணிக்கு சென்றடைகிறது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு அதிகாலை 2.50 மணிக்கு வருகிறது. இங்கிருந்து புறப்பட்டு கோவைக்கு காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது.
என்னென்ன வசதிகள்
சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 300 பயணிகள் பயணிக்கும் வகையில் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு(பொது) பெட்டிகள்-3, 800 பேர் பயணிக்கும் வகையில் 3 டயர் 2-ம் வகுப்பு சிலிப்பர் பெட்டிகள்-11, 360 பேர் பயணிக்கும் வகையில் ஏ.சி. 3 டயர் பெட்டிகள்-5, 54 பேர் பயணிக்கும் வகையில் ஏ.சி. 2 டயர் பெட்டி-1, 38 பேர் பயணிக்கும் வகையில் ஏ.சி. முதல் வகுப்பு 2 டயர் காம்போ பெட்டி-1 என மொத்தம் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். 1,552 பயணிகள் பயணிக்கலாம்.
அதிகரிக்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கை மட்டுமின்றி இந்த ரெயில்களில் பயோடாய்லெட்டுகள், மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்பிரிங் பொருத்தப்பட்ட போகிகள்(வண்டி சக்கர சட்டம்), விபத்துகளின்போது ஒரு ரெயில்பெட்டி மற்ற ரெயில் பெட்டியின் மீது மோதி பெரும் சேதம் விளைவிப்பதை தவிர்க்கும் வகையில் சென்டர் பப்பர் கப்ளர் இணைப்பு வசதியும் உள்ளது. மேலும் தீப்பிடிக்காத பிட்டிங்குகள் மற்றும் ரெயில்களின் உள்ளே சத்தம் கேட்பதை தவிர்க்கும் வகையில் இன்சுலேசன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பெரிய ஜன்னல்கள், கால் வழுக்காத பி.வி.சி. தரைவிரிப்புகள், ரெயில்பெட்டிகள் இடையே தானியங்கி கதவுகள் போன்ற மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story