போலீசாரை கண்டித்து துறையூரில் 3 இடங்களில் சாலை மறியல் பொதுமக்கள் மீது தடியடி- பரபரப்பு


போலீசாரை கண்டித்து துறையூரில் 3 இடங்களில் சாலை மறியல் பொதுமக்கள் மீது தடியடி- பரபரப்பு
x
தினத்தந்தி 9 Nov 2017 4:30 AM IST (Updated: 9 Nov 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

துறையூரில் போலீசாரை கண்டித்து 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துறையூர்,

துறையூரில் கடந்த சில மாதங்களாக போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார், ரோந்து போலீசார் ஆகியோர் துறையூர் பஸ் நிலையம், போலீஸ் நிலையம் எதிர்புறம், பாலக்கரை, ஆத்தூர் ரோடு, பெரியகடைவீதி, பெரம்பலூர் சாலை, புறவழிச்சாலை, பெரம்பலூர் புறவழிச்சாலை ரவுண்டானா, முசிறி பிரிவு ரோடு, திருச்சி ரோடு, கண் ணனூர் சாலை ஆகிய பகுதி களில் ஆங்காங்கே நின்று கொண்டு வாகன சோதனை யில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்போது மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள், வாகன ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ் இல்லாதவர்கள், தலைக்கவசம் அணியாதவர்கள், இருவருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சரக்கு வாகனத் தில் ஆட்களை ஏற்றி செல்பவர் கள் ஆகியோரை பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

ஆனால் விதிக்கப்படும் அபராதத்திற்கு முறையான ரசீது வழங்குவது இல்லை. ரசீதில் தேதி மற்றும் எதற்காக அபராதம் என்று குறிப்பிடப் படுவது இல்லை. வேலைக்கு செல்லும் நேரத்திலும், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் போதும், குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போதும் போக்குவரத்து போலீசார் வழிமறித்து வாகன சோதனையில் ஈடுபடுவதை கண்டித்து பொது மக்கள் துறையூர்- திருச்சி சாலையில் பாலக்கரையில் நேற்று திடீ ரென்று சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சாலை மறியல் மாலை 6.45 தொடங்கியது. இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போக்குவரத்து போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டார்கள்.

இதனால் துறையூரில் இருந்து சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி, பெரம்பலூர், சென்னை ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பஸ்களில் இருந்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டார்கள். பெண் பயணிகள் கைக் குழந்தைகளுடன் பஸ்களில் இருந்து இறங்கி பாலக்கரையில் இருந்து பஸ் நிலையத்திற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றார்கள்.

மறியல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் பாலக்கரையில் இருந்து பஸ் நிலையம் வரை அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் பஸ் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊர்க்காவல் படையினர் இனி வாகன சோதனையில் ஈடுபட மாட்டார்கள், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் முறையாக வழங்கப்படும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். பொதுமக்கள் மாலை முதல் இரவு வரை பஸ் மறியலில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் முசிறி பிரிவு ரோட்டிலும் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் ஒரு தனியார் பஸ் சேதம் அடைந்தது. ஒரு பெண் மீது கல் விழுந்ததில் அவர் காயம் அடைந்தார். அவருக்கு துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை யொட்டி போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஒரு பெண் காயம் அடைந்தார்.

இதற்கிடையே துறையூரில் போலீசாரை கண்டித்து 2 இடங்களில் மறியல் நடக்கும் செய்தி துறையூர் பகுதி முழுவதும் பரவியது. இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் புறவழிச்சாலையில் சொரத்தூர் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் திடீ ரென்று சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு மறியல் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் அங் கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் துறையூர் பகுதியில் பதற்றமும், பரபரப் பும் நிலவுகிறது. மறியல் போராட்டங்களை தொடர்ந்து பெரம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, திருச்சி, முசிறி சாலைகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Related Tags :
Next Story