பொதுப்பணித்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஏரி-ஆற்றுப்பாசன விவசாயிகள் கைது


பொதுப்பணித்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஏரி-ஆற்றுப்பாசன விவசாயிகள் கைது
x
தினத்தந்தி 9 Nov 2017 4:15 AM IST (Updated: 9 Nov 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

பொதுப்பணித்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஏரி-ஆற்றுப்பாசன விவசாயிகள் 100 பேர் கைது

திருவெறும்பூர்,

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 10-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், திருவெறும்பூர் பகுதியில் உள்ள புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இன்னும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்த வாய்க்கால் இன்னும் தூர் வாரப்படவில்லை. இதனால் துவாக்குடி, அசூர், பழங்கனாங்குடி, தேனீர்பட்டி, பொய்கைகுடி, அரவாக்குறிச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் இதுநாள் வரை விவசாய பணிகளை தொடங்க முடியவில்லை. இந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களும் தூர்வாரப்படவில்லை. பொதுப்பணித்துறையினரின் இந்த அலட்சிய போக்கை கண்டித்தும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும், இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே ஏரி-ஆற்றுப்பாசன விவசாயிகள், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில தலைவர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் திருவெறும்பூர் வருவாய் அதிகாரி கீதா, துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 100 பேரை துவாக்குடி போலீசார் கைது செய்து அண்ணா வளைவு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Related Tags :
Next Story