புழுதி மண்டலமான அண்ணா சாலை
ஒயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலைக்கு செல்லும் வளைவின் அருகே புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை விட்டு, விட்டு பெய்து வந்த நிலையில் நேற்று வெயில் அடித்தது. மழை காரணமாக அண்ணா சாலையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது பல்வேறு இடங்களில் இருந்து அடித்து வரப்பட்ட சேறும், சகதியும் மணல் திட்டு போல சாலையோரத்தில் படிந்திருந்தது.
வெயில் அடித்ததால் மணல் திட்டுகள் காய்ந்து தூசுகளாக பறந்து வருகின்றன. வாகனங்கள் செல்லும் வேகத்தில் மணல் திட்டுகளில் இருந்து தூசுகள் பறக்கின்றன.
இதனால் ஒயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலைக்கு செல்லும் வளைவின் அருகே புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.
இதேபோல நந்தனம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஜெமினி மேம்பாலம் அருகே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்ணா சாலையில் மழையால் சேதமடைந்து சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
குண்டும், குழியுமான சாலை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. எனவே சேதமான சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story