காஞ்சீபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம் கங்கை கொண்டான் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பட்டை அணிந்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
காஞ்சீபுரம்,
மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதையொட்டி காஞ்சீபுரம் கங்கை கொண்டான் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பட்டை அணிந்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஆர்.வி.குப்பன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் லோகநாதன், காஞ்சீபுரம் வட்டார தலைவர் அவளூர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு காஞ்சீபுரம் நகராட்சியில் 51 வார்டு பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து மதியழகன் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்த முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் அளித்த பேட்டிகளை தொகுத்து தயாரித்த புத்தகத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகி பரந்தூர் சங்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி அளவூர் நாகராஜன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story