வேலை இல்லாததால் திருமணத்துக்கு மறுப்பு மும்பை ஆசிரியைக்கு கத்திக்குத்து வாலிபர் கைது


வேலை இல்லாததால் திருமணத்துக்கு மறுப்பு மும்பை ஆசிரியைக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2017 4:24 AM IST (Updated: 9 Nov 2017 4:24 AM IST)
t-max-icont-min-icon

வேலை இல்லாத காரணத்தினால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மும்பை ஆசிரியையை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு, 

மும்பை புறநகர் கார்தேவ் நகரை சேர்ந்தவர் கவிதா அகர்வால்(வயது 33). ஆசிரியை. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவிதாவின் கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால் கவிதா, 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதன் காரணமாக அவர் திருமண இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்தார்.

இதை பெங்களூரு பார்வதிபுரத்தில் வசித்து வரும் லோகித்(34) என்பவர் பார்த்தார். இவரும் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர், கவிதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். மேலும், 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர்.

சம்பவத்தன்று, லோகித்தை பார்க்க கவிதா பெங்களூருவுக்கு வந்தார். அவர், லோகித் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, லோகித் வேலைக்கு எதுவும் செல்லாதது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த கவிதா, திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என கூறினார்.

கைது

இதன் காரணமாக கவிதா மற்றும் லோகித் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த லோகித் கத்தியை எடுத்து கவிதாவை 4 முறை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், படுகாயம் அடைந்த கவிதா, விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் விஷ்வேசபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story