‘பாரத பிரதமர்... பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.’ வார்த்தைகளில் தடுமாறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
‘பாரத பிரதமர்... பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியின்போது வார்த்தைகளில் தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. 22-வது நிகழ்வாக திண்டுக்கல்லில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி நடக்கிறது. அதில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்றார்.
மேலும் டி.டி.வி. தினகரன் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை குறித்து, அவரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரித்தபடி பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
முன்னதாக நிருபர்களிடம், அவர் பேட்டி அளிக்கும்போது, பாரத பிரதமர் என்று குறிப்பிட்டு தொடங்கினார். உடனே சட்டென சுதாரித்து கொண்டு, பாரத ரத்னா எம்.ஜி.ஆர். எனக்கூறி பேட்டியை தொடர்ந்தார். பாரத ரத்னா என்று தொடங்குவதற்கு பதிலாக பாரத பிரதமர் என்று கூறி, பின்னர் மாற்றியதால் நிருபர்கள், அருகில் நின்றிருந்த கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன்சிங் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தவறுதலாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story