திருப்பரங்குன்றத்தில் பெயிண்டர் படுகொலை முகம் சிதைக்கப்பட்டு பிணமாக கிடந்தார்
திருப்பரங்குன்றத்தில் முகம் சிதைக்கப்பட்டு பெயிண்டர் படுகொலை செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் தேவி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 37). பெயிண்டரான இவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு திருப்பரங்குன்றம் பை-பாஸ் ரோட்டில் பூங்கா பஸ் நிறுத்தம் அருகே புதருக்குள் பிணமாக கிடந்தார். அவரது உடலின் அருகே மதுபாட்டில், பிளாஸ்டிக் கப்புகள் கிடந்தன.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், தடயவியல் நிபுணர்கள் அங்கு விரைந்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் மதுரையில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக் கப்பட்டது. மோப்பநாய் பிணம் கிடந்த இடத்தில் இருந்து பாலாஜி நகர்,தேவி நகர் வழியே மெயின் ரோட்டுக்கு வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனால் கொலையாளிகள் ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் மற்றும் காரில் ஏறி தப்பி சென்று இருக்கலாம் என தெரிகிறது.
கொலையுண்ட சண்முகசுந்தரம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த சரண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாமுவேல்(7), சரவணன்(5) என்ற 2 மகன்கள் உள்ளனர். சண்முகசுந்தரம் அடிக்கடி குடித்துவிட்டு சரண்யாவிடம் தகராறு செய்து வந்தாராம். அதனால் சண்முகசுந்தரத்தை விட்டு பிரிந்து மகன்களுடன் சரண்யா தனியாக வசித்து வந்தார்.
சண்முகசுந்தரம் கொலை குறித்து பல்வேறு கோணங்களில் திருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சண்முகசுந்தரத்தின் மனைவி மற்றும் சில பெயிண்டர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story