குமரி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் 34 பேர் இடமாற்றம் கலெக்டர் உத்தரவு


குமரி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் 34 பேர் இடமாற்றம் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 10 Nov 2017 4:00 AM IST (Updated: 10 Nov 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் 34 பேர் இடமாற்றம் கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வந்த அதிகாரிகள் 34 பேரை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் பதவி உயர்வு பெற்று பத்மநாபபுரம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலக ‘ஜி’ பிரிவு தலைமை உதவியாளர் பாண்டியம்மாள் பதவி உயர்வுடன் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி கோலப்பன், நாகர்கோவில் கேபிள் டி.வி.தனி தாசில்தாராகவும், தோவாளை தனி துணை தாசில்தார் சேகர் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலக தனிதாசில்தாராகவும், முத்திரைதாள் தனி தாசில்தார் புரந்தரதாஸ் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரியாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தார் ஷீலா பத்மநாபபுரம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், கல்குளம் மண்டல துணை தாசில்தார் இசபெல் வசந்திராணி விளவங்கோட்டிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் தினேஷ்சந்திரன் மாவட்ட கலெக்டர் ‘ஜி’ பிரிவு தலைமை உதவியாளராகவும், தோவாளை தலைமையிடத்து துணை தாசில்தார் தாஸ், நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் அலுவலக கண்காணிப்பாளராகவும், டாஸ்மாக் உதவி மேலாளர் கந்தசாமி நாகர்கோவில் வரவேற்பு துணை தாசில்தாராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலக கண்காணிப்பாளர் குழந்தைராணி நாச்சியார் தோவாளை தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வருவாய் ஆய்வாளர்கள் 9 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட, மாவட்டம் முழுவதும் மொத்தம் 34 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story