கோலார் டவுனில், 50 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்தது
கோலார் டவுனில், 50 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்தது.
கோலார் தங்கவயல்,
கோலார் டவுனில், 50 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்தது.
கட்டிடம் இடிந்தது
கோலார் டவுன் அரசு பஸ் நிலையம் அருகே புட்டண்ணா என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் இருந்தது. கட்டிடத்தின் தரைதளத்தில் பேக்கரி, ஜஸ்கீரிம் கடை இயங்கி வருகிறது. பேக்கரியில் தங்கி வேலை செய்யும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3-வது மாடியில் வசித்து வருகின்றனர்.
2-வது மாடியில் கட்டிட உரிமையாளர் புட்டண்ணா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் திடீரென கட்டிடத்தின் தரைதளம் இடிந்தது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் புழுதி கிளம்பியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இடிந்த கட்டிடத்தை வந்து பார்த்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த நகரசபை தலைவி மகாலட்சுமி தலைமையிலான அதிகாரிகளும், தீயணைப்பு படைவீரர்களும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து இடிந்த கட்டிடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது அந்த கட்டிடம் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பது தெரியவந்தது.
உயிர்ச்சேதம் ஏற்படவில்லை
இதனை தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது மாடியில் இருந்த புட்டண்ணாவின் குடும்பத்தினர், பேக்கரி ஊழியர்களை தீயணைப்பு படைவீரர்கள் ஏணி மூலம் மீட்டனர்.
மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் வெளியே எடுத்து வரப்பட்டன. இதனை தொடர்ந்து பழமையான கட்டிடத்தை இடித்து அகற்ற நகரசபை தலைவி மகாலட்சுமி உத்தரவிட்டார். அதன்பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் பழமையான கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. தரைதளம் இடிந்த போது, பேக்கரி மற்றும் ஜஸ்கீரிம் கடைகள் திறக்கப்படாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கட்டிடம் இடிந்ததால் கோலார் டவுனில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story