மீஞ்சூர் அருகே வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு 4 பேர் கைது


மீஞ்சூர் அருகே வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2017 2:29 AM IST (Updated: 10 Nov 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் பறித்த பொன்னேரி பள்ளம் பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னேரி, 

மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 23). இறால் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து பெரிய மனோபுரம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் பார்த்திபனை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பார்த்திபனுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த பொன்னேரி பள்ளம் பகுதியை சேர்ந்த ஜவகர் (22), ஆலாடு மணிகண்டன் (22), ரஞ்சித்குமார் (23), தீபன்(23) ஆகியோரை கைது செய்தனர். 

Next Story